பாடல் #9250
கண்ணின் மணியே கண்ணின் மணியே
🎙 கிறிஸ்தவ பாடல்
கண்ணின் மணியே கண்ணின் மணியே - நீ கண்ணீரை சிந்துவதும் ஏன் மணியே உந்தன் இறைவன் நான் அல்லவோ நான் இருக்கையில் பயம் என்னவோ - 2 பயம் என்னவோ ( 2 ) நான் தந்தேன் உனக்கு உறவுகளை அவர் வழியாய் வெளிப்படுத்தினேன் திட்டங்களை இறைத்திட்டம் மீறி வாழ்கின்றாயோ மனம் உடைந்து நீயும் நிற்கின்றாயோ அஞ்சாதே நான் உன்னோடு இருக்கின்றேன் உன்னை நானே மன்னிப்பேனே கைவிடப்பட்ட நிலையில் நீ இருக்கின்றாய் அன்பில்லா நிலையில் என்றும் வாழ்கின்றாய் எதிர்காலம் இருளாய் இருக்கின்றதோ பயம் உன்னை சூழ்ந்து நிற்கின்றதோ அஞ்சாதே நான் இருக்கிறேன் உன்னை நானே வாழவைப்பேனே