பாடல் #9195
உயிரே உயிரே எந்தன்
🔤 Uyirae Uyirae Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரே உயிரே எந்தன் உயிரானீரே தினமும் தினமும் எந்தன் நினைவானீரே என்னைத் தேடிவந்து தேற்றின தென்றல் நான் தேடும்போது இன்பமானதே அது மாறாதது என்னை மறவாதது - 2 பாலைவனத்தில் வாழ்ந்த என்னை சோலைவனமாய் மாற்றின தேவன் அது அழியாதது என்றும் செழிப்பானது ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம் தேவ அன்பிற்கு அணை இல்லையே அது குறையாதது என்றும் நிறைவானது நீரின்றி வாழ்வில்லை உம் நினைவன்றி மகிழ்வில்லை நீர் வேண்டும் தேவா எனக்கு வேண்டும் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirae Uyirae Endhan Uyiraaneerae Thinamum Thinamum Endhan Ninaivaaneerae Ennaith Thaetivanthu Thaerrina Thendral Naan Thaetumpothu Inbamaanathae Athu Maaraadhathu Ennai Maravaadhathu - 2 Paalaivanatthil Vaazhndha Ennai Solaivanamaay Maarrina Devan Athu Azhiyaadhathu Enrum Sezhippaanathu Otum Aarrukku Anai Podalaam Thaeva Anpirku Anai Illaiyae Athu Kuraiyaadhathu Enrum Niraivaanathu Neerinri Vaazhvillai Um Ninaivanri Makizhvillai Neer Vaentum Thaevaa Enakku Vaentum Thaevaa