பாடல் #918
இயேசுவே தெய்வம் என்றால்
🔤 Yesuvae Theyvam Enraal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே தெய்வம் என்றால்! இயேசுவே தெய்வம் என்றால், துணிந்து செல்லுங்கள், பணிந்து சொல்லுங்கள் இயேசுவே தெய்வம் என்றால், காலத்தைப் பார்த்தால் போதகனாய் வாழ்வு மிளிர்ந்திட வேண்டிய நீ ஆரம்பப் பாடங்கள் அறிந்தபின்னும் அறியாக் குழந்தைபோல தவறுவதேன்? தீயாய் வெடித்துப் பரவாமலே திருச்சபை மயங்கித் தூங்குவதேன்? சுற்றும் நிகழ்ந்திடும் சங்கதிகள் மறந்தவள் நித்திரை கொண்டது ஏன்? பரிசேயர், பண்டிதர் நீதியிலும், பாரதப் புதல்வர்கள் பக்தியிலும் உன் நீதி பக்தி மிஞ்சாவிட்டால் இயேசுவைச் சொல்வதை நிறுத்திவிடு தேசத்தில் காண்கிற சலனங்களை, தீமை எதிர்ப்பு சக்திகளை, அஞ்சாமல் எதிர்த்து முன்னேறிச்செல் வென்றவர் உன்னோடு என்றும் துணை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Theyvam Enraal! Yesuvae Theyvam Enraal, Thuninthu Sellunggal, Paninthu Sollunggal Yesuvae Theyvam Enraal, Kaalatthaip Paartthaal Podhakanaay Vaazhvu Milirnthida Vaentiya Nee Aarambap Paadanggal Arindhapinnum Ariyaak Kuzhanthaipola Thavaruvathaen? Theeyaay Vetitthup Paravaamalae Thirucchapai Mayangkith Thoongkuvathaen? Surrum Nigazhnthitum Sanggathigal Marandhaval Nitthirai Kondathu Aen? Parisaeyar, Pantidhar Neethiyilum, Paarathap Pudhalvarkal Pakthiyilum Un Neethi Pakthi Minjsaavittaal Yesuvaich Solvathai Nirutthivitu Thaesatthil Kaankira Salananggalai, Theemai Ethirppu Sakthigalai, Anjsaamal Ethirtthu Munnaerichsel Vendravar Unnotu Enrum Thunai