பாடல் #9144
நிலையில்லாத உலகத்திலே
🔤 Nilaiyillaadha Ulakatthilae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலையில்லாத உலகத்திலே நிறைவில்லாத வாழ்க்கையிலே சோதனைகள் சூழும் வேளை கலங்காதே மனமே கர்த்தர் உன் துணையே அலைகள் மோதி நிலைகள் மாறி அலையும் படகினைப்போல் அலைந்து திரியும் வாழ்க்கையிலே பயந்து பயந்து நயந்து வீழ்கையிலே சுகமில்லாமல் பெலமில்லாமல் தளர்ந்து சோர்ந்திடும் வேளை தயங்கி போகும் நிலைமையிலே மயங்கி நீயும் தவிக்கையிலே வீசும் புயலில் கோர காற்றில் அசையும் மரங்களைப் போல் விசுவாசங்கள் அசைவது என்ன வைராக்கியங்கள் தளர்வதென்ன கரம் பிடித்தவர் கர்த்தர் இயேசு கைவிடமாட்டார் உன்னை சிலுவை நிழலில் தஞ்சமானால் சிலுவை நாதரின் கிருபை உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilaiyillaadha Ulakatthilae Niraivillaadha Vaazhkkaiyilae Sodhanaigal Soozhum Vaelai Kalangkaathae Manamae Kartthar Un Thunaiyae Alaigal Mothi Nilaigal Maari Alaiyum Patakinaippol Alainthu Thiriyum Vaazhkkaiyilae Payanthu Payanthu Nayanthu Veezhkaiyilae Sugamillaamal Pelamillaamal Thalarnthu Sornthitum Vaelai Thayangki Pokum Nilaimaiyilae Mayangki Neeyum Thavikkaiyilae Veesum Puyalil Kora Kaarril Asaiyum Maranggalaip Pol Visuvaasanggal Asaivathu Enna Vairaakkiyanggal Thalarvathenna Karam Pititthavar Kartthar Yesu Kaividamaattaar Unnai Siluvai Nizhalil Thanjjamaanaal Siluvai Naadharin Kirupai Untu