பாடல் #9142
என் ஆண்டவரே என்
🔤 En Aandavarae En
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆண்டவரே என் மன்றாட்டைக் கேளும் உந்தன் பாதத்தில் நான் கெஞ்சி நிற்கிறேன் நிந்தனை அவமானம் நீங்க செய்திடும் விந்தையின் அற்புதங்கள் எம்மில் தந்திடும் உந்தனை புகழ்வேன் உமக்காக வாழ்வேன் சொந்தமாக எனை தந்துட்டேன் அந்தம் வரை எமைத்தாங்கி செல்லுமே உம்மையே உறுதியாக பற்றியே வாழ்வேன் உன்னத சத்தியத்தின் வழி நடப்பேன் அடைக்கலம் தந்து என்னை சேர்த்துக் கொள்ளும் அடிமையாக என்னை தாழ்த்தினேன் விடியல் காலம் தந்து காத்து கொள்ளுமே உமது முகத்தை நீர் மறையாதிரும் எமது ஜெபத்தை தள்ளாதிரும் அரணாக நின்று எனை காத்துக்கொள்ளும் சரணடைந்தேன் சகாயம் செய்யும் தருணமே இதுவென தத்தம் செய்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aandavarae En Manraattaik Kaelum Undhan Paadhatthil Naan Kenjsi Nirkiraen Nindhanai Avamaanam Neengga Seythitum Vinthaiyin Arpudhanggal Emmil Thanthitum Undhanai Pugazhvaen Umakkaaga Vaazhvaen Sondhamaaga Enai Thanthuttaen Andham Varai Emaitthaangki Sellumae Ummaiyae Uruthiyaaga Parriyae Vaazhvaen Unnatha Satthiyatthin Vazhi Natappaen Ataikkalam Thanthu Ennai Saertthuk Kollum Atimaiyaaga Ennai Thaazhtthinaen Vitiyal Kaalam Thanthu Kaatthu Kollumae Umathu Mugatthai Neer Maraiyaathirum Emathu Jebatthai Thallaathirum Aranaaga Ninru Enai Kaatthukkollum Saranatainthaen Sakaayam Seyyum Tharunamae Ithuvena Thattham Seykiraen