பாடல் #9127
மாறிடாதது இயேசுவின் அன்பு
🔤 Maaritaadhathu Yesuvin Anpu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 எழும்பிப் பிரகாசி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறிடாதது இயேசுவின் அன்பு மாறிப் போகுமே மனிதனின் அன்பு அன்னை மாறலாம் தந்தை மாறலாம் அன்பு மனைவியும் மாறியே போகலாம் சிலுவை மீதினில் ஜீவனை தந்த இயேசுவின் அன்பு மாறிடாதது மகனும் மாறலாம் மகளும் மாறலாம் ஆருயிர் நண்பனும் மாறியே போகலாம் ஏக சுதனை தியாகமாய் தந்த தேவனின் அன்பு மாறிடாதது உறவும் மாறலாம் உலகமும் மாறலாம் உனக்குள்ளே யாவுமே மாறியே போகலாம் பரத்தில் இன்றும் பரிந்து பேசும் நேசரின் அன்பு மாறிடாதது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaritaadhathu Yesuvin Anpu Maarip Pokumae Manidhanin Anpu Annai Maaralaam Thanthai Maaralaam Anpu Manaiviyum Maariyae Pogalaam Siluvai Meethinil Jeevanai Thandha Yesuvin Anpu Maaritaadhathu Makanum Maaralaam Makalum Maaralaam Aaruyir Nanpanum Maariyae Pogalaam Aega Sudhanai Thiyaagamaay Thandha Devanin Anpu Maaritaadhathu Uravum Maaralaam Ulakamum Maaralaam Unakkullae Yaavumae Maariyae Pogalaam Paratthil Inrum Parinthu Paesum Naesarin Anpu Maaritaadhathu