பாடல் #9091
ஐயா நீரன்று அன்னா
🔤 Aiyaa Neeranru Annaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்ட பாடு ஏசையாவே! கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ? கயவர்கள் தூற்றினாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே! பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ எள்ளளவும் பேசாத ஏசையாவே! கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக் கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! – ஐயா 4.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர் தாம் முறுக்கிக் கர்வங்கொண்டே ஏசிட ஏசையாவே! சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்த சாடிக் கன்னத்தறைய ஏசையாவே! – ஐயா 5. பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே! அண்ணலே, அன்பருய்ய அவலங்களைச் சகித்தீர்; அடியேனைக் காத்தருளுதம், ஏசையாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aiyaa Neeranru Annaa Kaaypaavin Veettil Naiyavae Patta Paatu Aesaiyaavae! Kaigal Kattinarkolo? Kaalkal Thallaatinavo? Kayavarkal Thoorrinaaro Aesaiyaavae! – Aiyaa 2.thiru Mugam Arul Mangga Sengkuruthigal Pongga Peruntheeyar Thunpuruttha Aesaiyaavae! Porumai Anpu Thayaalam Punidhamaaga Vilangga Arumaip Porul Thaana Aesaiyaavae! – Aiyaa 3.mullin Mutiyaninthu Vallalae En Nigazha Ellalavum Paesaadha Aesaiyaavae! Kallan Polae Pititthuk Kasaiyaal Atitthu Migak Kanmigal Seytha Paavam Aesaiyaavae! – Aiyaa 4.karroonil Saertthirukkich Sertralar Thaam Murukkik Karvangkontae Aesida Aesaiyaavae! Sarrumirakkamillaach Santaalan Oti Vandha Saatik Kannattharaiya Aesaiyaavae! – Aiyaa 5. Ponnaana Maeniyathil Puzhuthi Migap Patiya Punniyan Neer Kalangga, Aesaiyaavae! Annalae, Anbaruyya Avalanggalaich Sakittheer; Atiyaenaik Kaattharuludham, Aesaiyaavae.