பாடல் #9090
பாருங்கள் தொடரந்து வாருங்கள்
🔤 Paarunggal Thodaranthu Vaarunggal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாருங்கள், தொடரந்து வாருங்கள், கொல்கொதா பாதையிற், கோதையிதே ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் -பாருங் 1.பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே 2.பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியதே பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே நாபிக்கமலமே பற்றிக் கோபித்துக் கரியுதே நடையுமுடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே 3.துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகினிறார் துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார் அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார் அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார் 4. திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே, செங்குருதி களெல்லாம் பொங்கி வடிந்ததே, சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே, ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarunggal, Thodaranthu Vaarunggal, Kolkothaa Paathaiyir, Kothaiyithae Aarung Kaanavae Aattuvaasal Katanthu Malai Maettil Natandhanandhang Kottigal Patukinraar -paarung 1.ponnaay Oliru Maeni Mannaay Matiyuthae Pungga Udalellaam Puzhuthigal Patiyuthae Nannaya Malark Kankal Kanneerkal Vatikkuthae Naavum Asthiyum Kaaynthu Saavumae Pitikkuthae 2.paaviyaith Thaeti Vandha Paadhanggal Poriyathae Patsatthinaal Virittha Kaigalum Neriyuthae Naapikkamalamae Parrik Kopitthuk Kariyuthae Nataiyumutaiyun Thoynthu Sathaigalum Sariyuthae 3.thunba Thuridhatthilum Anpaiyae Pozhikiniraar Thuttarkal Adharkaagath Thittugal Mozhikinraar Anpaayp Pizhaikkath Thamathaaviyaik Ketukkinraar Antho Nasaraetthaiyar Nondhati Etukkinraar 4. Thirumuga Arul Onrum Theriyaadhataindhathae, Sengkuruthi Kalellaam Pongki Vatindhathae, Saruva Vallapam Kunritthiraiyum Niraindhathae, Jakamum Paramun Thukka Saagaratthazhunthuthae.