பாடல் #9086
தேவதே ஓர் ஏசு வஸ்து
🔤 Thaevathae Or Aesu Vasthu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவதே, ஓர் ஏக வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்து தேவன் ஆதியே நமோ ஜீவ ஆவி எகோவா, அல்பா ஓமேகா நமஸ்து - ஒரு - தேவ 1. மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ் பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு - தேவ 2. ஆதியாய் அனாதியாய், அரூபியாய்ச் சொரூபியாய் நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு - தேவ 3. மாசில்லா நேச வாச மட்டில்லாத நன்மையே தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே- ஒரு - தேவ 4. ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி,ஏகமாமா,ஆனந்தமே மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே- ஒரு - தேவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevathae, Or Aega Vasthu, Devanaamanaam Kiristhu Devan Aathiyae Namo Jeeva Aavi Ekovaa, Alpaa Omaekaa Namasthu - Oru - Thaeva 1. Moovaraay Aroopiyaay Mun Oozhi Oozhi Kaalam Vaazh Paava Thaazhvilaa Valaa, Paraabaraa, Thayaabaraa- Oru - Thaeva 2. Aathiyaay Anaathiyaay, Aroopiyaaych Soroopiyaay Neethi Njaaya Naermaiyaay Neetuzhi Aal Suyaathipaa- Oru - Thaeva 3. Maasillaa Naesa Vaasa Mattillaadha Nanmaiyae Thaesulaa Vanaathi Aesu Maa Sirandha Unmaiyae- Oru - Thaeva 4. Eerillaa Meynjnjaana Jothi,aegamaamaa,aanandhamae Maarilaa Thanukrakanjseya Vandha Aathiyandhamae- Oru - Thaeva