பாடல் #9085
ஜீவனே நித்திய ஜீவனே
🔤 Jeevanae Nitthiya Jeevanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனே, நித்திய ஜீவனே ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த ஜீவனே, நித்திய ஜீவனே காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த - ஜீவனே 1. வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன் துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன் அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல் ஆன வான மோன ஞான நேசமே - ஜீவனே 2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன் சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய மிகுஞ் சருவேசன் சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர தேசு லாச நேச மேசியா வேந்தே- ஜீவனே 3.வானத்தைப் படைத்த கர்த்தர், ஞானத்தை உடைத்த நித்தர் மேன்மை தேவத்துவ பரிசுத்தர், கானத்துற்றெமைக்கரிசித்தர் மட்டளவறறோர் மாட்டுக் கொட்டிலுற்றோர் இன்று வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம் - ஜீவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanae, Nitthiya Jeevanae Jeevanae Paramaanandha Thivya Paalanaagavandha Jeevanae, Nitthiya Jeevanae Kaava Thil Vilaindha Aathi Aevai Vinaitheera Vandha - Jeevanae 1. Vallamai Thiritthuva Devan, Sollarum Kirupaip Pirathaaban Thullibatthin Njaanatheeban,nallavarkkarul Thayaaban Allirul Pothae Adar Pullathin Meethae Varal Aana Vaana Mona Njaana Naesamae - Jeevanae 2. Nitthiya Kirupaip Pirakaasan, Atthanaark Korae Kumaraesan Satthiya Vaedhatthin Vaasan, Sthutthiya Mikunj Saruvaesan Sitthirach Sudhanae Thiri Thathva Arpudhanae Para Thaesu Laasa Naesa Maesiyaa Vaenthae- Jeevanae 3.vaanatthaip Pataittha Kartthar, Njaanatthai Utaittha Nitthar Maenmai Thaevatthuva Parisutthar, Kaanatthurremaikkarisitthar Mattalavararor Maattuk Kottilurror Inru Vaazhtthi Aerri Porri Sthotthiranj Solvom - Jeevanae