பாடல் #9076
ஆதி பராபரனின் சுதனே
🔤 Aathi Paraabaranin Sudhanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா- எனக் காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ யேசு நாதா? தீதணுகாத பராபரன் சேய் அல்லோ யேசுநாதா? – நீர் செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ யேசுநாதா? பாதகன் நான் அல்லோ கட்டுண்ண வேண்டிய தேசுநாதா? சற்றும் பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன் யேசுநாதா? வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ யேசுநாதா? சற்றும் மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ யேசுநாதா? 2. மத்யஸ்தனாய் எனக்காக் வந்தீர் அல்லோ யேசுநாதா? இந்த வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ யேசுநாதா? எத்தனை பாதகம் செய்தவனாகிலும் யேசுநாதா? – எனை ரட்சிப்பதுன் கடன் அல்லாமல் ஆர் கடன் யேசுநாதா? சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே யேசுநாதா? – கெட்ட சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே யேசுநாதா? சித்தம் இரங்கி எனை முகம் பார்க்கவே யேசுநாதா? – என்னைத் தேடி வலிய வரத் தயவானீரோ யேசுநாதா? 3. பத்தம் இல்லாதது ரோகி நான் அல்லவோ யேசுநாதா? – உமைப் பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ யேசுநாதா? பெத்தரிக்கமான பெருமையினாலே நான் யேசுநாதா! – கெட்ட பேயைச் சிநேகித்து இக்கோலம் ஆகினேன் யேசுநாதா! புத்தி யில்லாத மிருகம்போல் ஆயினேன் யேசுநாதா! – மனம் போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன் யேசுநாதா! சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி யேசுநாதா! – உன்தன் சீர்பதம் சாஸ்தவம் சேவை புரியச் செய் யேசுநாதா!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aathi Paraabaranin Sudhanae Kiristhaesunaathaa- Enak Kaagavae Itthanai Paatugal Patteero Yaesu Naathaa? Theedhanukaadha Paraabaran Saey Allo Yaesunaathaa? – Neer Seytha Kurtram Anuvaakilum Thaan Unto Yaesunaathaa? Paadhakan Naan Allo Kattunna Vaentiya Thaesunaathaa? Sarrum Paavam Illaadha Neer Kattunnap Pattathaen Yaesunaathaa? Vaathai Enakku Varatthakum Allavo Yaesunaathaa? Sarrum Maasanukaadha Neer Vaathaikkul Aaneero Yaesunaathaa? 2. Mathyasthanaay Enakkaak Vantheer Allo Yaesunaathaa? Indha Vanjjakan Sondhap Pinaiyaali Neer Allo Yaesunaathaa? Etthanai Paadhakam Seythavanaakilum Yaesunaathaa? – Enai Ratsippathun Katan Allaamal Aar Katan Yaesunaathaa? Satthuru Naan En Rarinthum Iruntheerae Yaesunaathaa? – Ketta Santaalan Sinthaiyai Murrum Ariveerae Yaesunaathaa? Sittham Irangki Enai Mugam Paarkkavae Yaesunaathaa? – Ennaith Thaeti Valiya Varath Thayavaaneero Yaesunaathaa? 3. Pattham Illaadhathu Roki Naan Allavo Yaesunaathaa? – Umaip Paatubatutthina Paadhakan Naan Allo Yaesunaathaa? Pettharikkamaana Perumaiyinaalae Naan Yaesunaathaa! – Ketta Paeyaich Sinaekitthu Ikkolam Aakinaen Yaesunaathaa! Putthi Yillaadha Mirugampol Aayinaen Yaesunaathaa! – Manam Pona Vazhiyellaam Poy Alainthaengkinaen Yaesunaathaa! Sittham Vaitthen Paeril Thirukkataik Kannokki Yaesunaathaa! – Unthan Seerpatham Saasthavam Saevai Puriyach Sey Yaesunaathaa!