பாடல் #9074
கிருபை கூரும் ஐயனே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
கிருபை கூரும் ஐயனே – பாவி என் சிறுமை தீரும் மெய்யனே பொறுமையே மிகுந்த அருமை தேவனே நீர் 1.ஆறு லட்சண தேவா அடியார்க்குத் தேறுதல் அருள்தா வா திருமறை கூறும் கருணை நாவா குறை அறப் பேறு பெறச் செய் ஜீவா பெரியவா ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே நீர் 2.பத்தர் தொழும் சருவேசா பரிந்தருள் வைவத்த சத்திய வாசா மகா பரி சுத்தக் கிருபையின் நேசா சுயாதிப முத்தொழில் தரும் ஈசா முழுதும் என் மத்தியஸ்தனான நித்ய கிறிஸ்துவே நீர் 3.பாவத்தின் வழி நடந்தேன் பசாசுடன் சாபத்திலே கிடந்தேன் சதா நித்ய கோபத்தையே அடைந்தேன் கொடுமையின் ஆபத்தால் மனம் உடைந்தேன் அடிமையை மாபத்திரத் தோடென் பரிதாபத்தைப் பார்த்திரங்கி 4.சரணம் சரணம் நாதா! தவிக்கிற தருணம் தருணம் வேதா! – தயாபர கிரணம் இலங்கும் பாதா! – கிலேசங்கள் திரணம் உராத நீதா! திடுக்கிடும் மரண வேளையிலும் கரணம் மயங்கும் போதும்