பாடல் #9072
தருணமே பரம சரீரியெனைத்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
தருணமே பரம சரீரியெனைத் தாங்கி யருள் கருணை வாரி. உரிமையடி யரனுசாரியுயர் எருசலை நகரதிகாரி அதி - தருண 1. வரரடி தொழும் வெகுமானி பரன் மகிமை யொளிர் தேவசமானி நரர்பிணை யொரு பிரதானி யேசு நாயகனென திச மானி அதி. - தருண 2. ஆதார முன்னையன்றி யாரே யெனக் கன் பாய்த்திருக் கண்கொண்டு பாரே பாதார விந்தங் கதிசேரே இசரேல் பார்த்தி பன்றவிது வங்கிஷ வேரே - அதி - தருண 3. நித்த நித்தமாக வெந்தன் மேலே வருவ தெத்தனை துன்பங்களொருக் காலே அத்தனையு நீக்கு தற்குன் காலே யெனக் குத்தம துணைதான் மனுவேலே - அதி - தருண 4. கங்குல் பகலுந்துயரங் கோவே மனக் கலக்க மொழித் தெனைத் தற்காவே பங்கெனங்குத் தந்த மெய் மன்னாவே யேழைப் பாவியை யிரட்சியு மேசுதேவே - அதி - தருண 5. ஐயாவுனக் கடிமை நானே யெனை யாண்ட பரா பரனீ தானே மெய்யாயனுக் கிரகஞ் செய்கோனே கவி வேதநாயகன் மெத்தச் சொன்னானே அதி - தருண