பாடல் #9071
தேவா திருக்கடைக்கண்
🔤 Thaevaa Thirukkataikkan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா திருக்கடைக்கண் பார் ஐயா வினை தீரையா வினை தீரையா(2) - தேவா மூவாய் உலகில் வந்த யோவா (2) - சச்சிதானந்தா 1.மேவிய தயை நிரம்பி, ஆவலுடன் விரும்பி பாவி எனையே திரும்பிப் பார், ஐயா ஸ்வாமி! 2.பொல்லா உலகம் பகை - அதின் எல்லா செல்வமும் புகை பொல்லா உலகம் பகை வல்லா நின் கிருபை (2) ஆளுமே தேவா 3.அந்தி சந்தியும் விடாமல் சந்திரப் பிசாச டாமல் அந்தி சந்தியும் விடாமல் எந்த விதமும் கெடாமல் (2) ஆளுமே தேவா 4.சர்ப்பனை யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால் எப்படி அடிமை கரையேறுவேன், ஸ்வாமி! 5.எத்தனை துயர் அடைந்தேன்! மெத்தவும் மன துடைந்தேன்; சித்தம் இரங்காய், என் மணவாளனே ஸ்வாமி 6.இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு வந்தனம்! அனந்தனந்தம் ஸ்தோத்திரமே, ஸ்வாமி! - தேவா 7. வேதநாயகன்றன் பாவா ஓதிய ஒருமைத் தேவா பாதுகாத்தருள் செய் நித்திய ஜீவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Thirukkataikkan Paar Aiyaa Vinai Theeraiyaa Vinai Theeraiyaa(2) - Thaevaa Moovaay Ulakil Vandha Yovaa (2) - Sachsithaananthaa 1.maeviya Thayai Nirampi, Aavaludan Virumpi Paavi Enaiyae Thirumpip Paar, Aiyaa Svaami! 2.pollaa Ulakam Pakai - Athin Ellaa Selvamum Pukai Pollaa Ulakam Pakai Vallaa Nin Kirupai (2) Aalumae Thaevaa 3.anthi Santhiyum Vitaamal Santhirap Pisaasa Taamal Anthi Santhiyum Vitaamal Endha Vidhamum Ketaamal (2) Aalumae Thaevaa 4.sarppanai Yathaay Ulakam Ippatith Thurogam Seythaal Eppati Atimai Karaiyaeruvaen, Svaami! 5.etthanai Thuyar Atainthaen! Metthavum Mana Thutainthaen; Sittham Irangkaay, En Manavaalanae Svaami 6.indhath Thinatthil Enakkuth Thandha Sugatthukkunakku Vandhanam! Anandhanandham Sthotthiramae, Svaami! - Thaevaa 7. Vaedhanaayakandran Paavaa Othiya Orumaith Thaevaa Paathukaattharul Sey Nitthiya Jeevanae