பாடல் #9070
பாவப்பாரில் உன்னத
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
பாவப்பாரில் உன்னத-சமாதனம் தேவ வாக்கிதுவல்லோ? 1.பாவி உன்தனுக்கிந்த ஓவிய வாக்கை யீந்த பாவநாசர் யேசுரத்தம் ஆறுதலைப் பேசுஞ் சத்தம் 2.கடுத்தவேலை கூடவே வருத்தந்தொல்லை நீடவே கர்த்தரின் சித்தந்தனைக் கருத்தாய்ச்செய்வ தாறுதல் 3.உறவர் நம் முற்ற நேசர் புறமொதுங்கினும் யேசு உறங்காது யாவரையும் உரமாய் அரவணைப்பார் 4.வருங்காலான வைகளும் மரணகாலவிருளும் அறவே நம் யேசுவேந்தர் அருளுவர் சமாதானம் 5.பரமானந்தமே ஓங்கும் தரணித்துன்பமும் நீங்கும் பரலோகச் சமாதானப் பரவசம் ஆகுவோம் நாம்