பாடல் #9067
என்னோ பல நினைவாலும்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய். மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே 1.அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ 2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் - உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே 3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் - அவர் நிசமாக உன் வல பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய் 4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன் தேசம் எங்கும்சுற்றிப் பார்த்தும் - தேவ சேயர்கள் பட்டினியாகக் காணேன் என்ற திவ்ய உரையும் பொய்யாமோ 5.தேகமும் கெட்ட உலகமும் பேயும் திரண்டு நினைப் பொருதாலும் - அதை ஜெயித்த யேசு நின் மன்னவ ராகையில் சிந்தனை வேறென்ன நினைக்கு 6.தேவ பிதா நின் பிதாவும் இயேசு நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன் தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும் தேவை நினக் கொன்றும் இல்லையே