பாடல் #9065
வேத வசன விதைகளை
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
வேத வசன விதைகளைப் புவியில் விதைப்பில் தெளிப்பில் வெகு நல்ல பாடம் பாதைதணில் விதைக்கும் பக்தனருள்வேதம் பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத 1.அதிசய வசனம் இந்திய கரையில் ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே நிதிவெல்லம் பெறுதே நலமிக்கதருதே நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத 2.தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில் தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம் நேயமாய் மனதில் இறுகவே நின்று நிமலன் கிருபை நிறைவுறச் செய்யும். – வேத 3.நால்வகைத் தால மேளங்கள் கொட்ட நடனமுடை சபைமிகக்கூடச் சாலவே மக்கள் இன்னிசை பாடச் சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட. – வேத