பாடல் #9063
தரி தாழ்மையே தெரிந்து வெறு
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
தரி தாழ்மையே தெரிந்து வெறு தாட்டிகமதை உரிந்து திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு செயலதை நீ குறி மனமே - அவர் தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த் தாழ்ந்திருந்தார் அனுதினமே - தரி மனத் தரித்திரர் தாம் பாக்கியர் எனவே வாகுடன் அவர் உரைத்தாரே - நெஞ்சே உனக்குள் இத்தகையான நற்குணமே உண்டோ என்றாய்ந்து நீ பாரே - தரி மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார் வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர் தமக்கருள் புரிகுவர் திடனே - தரி ஆதியில் தூதர்களில் சிலர் கெர்வம் அடைந்து நல் வாசமற்றாரே உடன் தீதறு பேய்களால் எரிநகரில் சேர்ந்ததி சாபமுற்றாரே - தரி