பாடல் #9062
திரும்பிப் பாராதே
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
திரும்பிப் பாராதே, சோதோமைத் திரும்பிப் பாராதே விரும்பிப் பார்த்து, லோத்தின் பெண்டு வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு, 1. சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு,- மாதர் சந்தடி செய்யும் சீராட்டு, விந்தையான போரோட்டு, - மந்தை வேடிக்கை என்று விட்டோட்டு 2. செல்வத்திலே மெத்தச் செருக்கு - நீ செய்வதெல்லாம் முழுத்-திருக்கு பல் வழி நீரோட்டப் பெருக்கு- ஏன் பண்ணுகிறாய் இந்த முறுக்கு? 3. அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் - உல காசையினால் மெத்த தியங்கிறாய் சங்கடத்துள்பட்டு மயங்கிறாய் - வீண் சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் ? 4. ஆண்டவர் யேசு சகாயம் - உனக் கடைக்கலம் ஐந்து காயம்; வேண்டிக் கொள்வது நேயம்; கை விடாதே இந்த உபாயம். 5. அங்குமிங்குஞ் சுற்றித் தயங்கிறாய்யுல காசையினால் மெத்த தியங்கிறாய் சங்கடத்துட் பட்டு மயங்கிறாய் வீண் சண்டாள ரோடே யேன்முயங்கிறாய் 6. பாதகரோ டொன்றுஞ் சொல்லாய் அவர் பாதையிலே சற்றும் நில்லாய் மாதரைத் தேடிச் செல்லாய் கெட்ட மாங்கிஷ இச்சையைக் கொல்லாய் 7. வேதநாயகன் பாட்டை யேசு மேசியாவின் மன் றாட்டைப் பாது காக்குமோர் கோட்டை யென்று பத்திர மாக்கிக்கொள் கூட்டை