பாடல் #9061
செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
🔤 Seyya Vaentiyathaich Seekkiram
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செய், செய்,செய்,செய்,செய் வையகமும் அதன் வாழ்வுகளும் மிக மகிமை பெருமை பொருளானதுவும் வெய்யவன் கண்ட பனிபோலாம் இது மெய்,மெய்,மெய்,மெய்,மெய் - செய் ஆவியும் கூடுவிட் டேகாமுன் ஆபத்து நாட்கள் வந்தணுகாமுன் தேவசுதன் ஜெக ரட்சகரண்டை சேர், சேர், சேர், சேர், சேர், - செய் அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும் அகற்றி நீ அனுதினமும் திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில் செல்,செல்,செல்,செல்,செல் - செய் துர்ச்சன ரோடுற வாகாமல் ஐயன் துய்ய விதிபத்து மீறாமல் உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந்து உய்,உய்,உய்,உய்,உய் - செய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seyya Vaentiyathaich Seekkiram Sey, Sey,sey,sey,sey Vaiyakamum Adhan Vaazhvugalum Miga Makimai Perumai Porulaanathuvum Veyyavan Kanda Panipolaam Ithu Mey,mey,mey,mey,mey - Sey Aaviyum Kootuvit Taekaamun Aabatthu Naatkal Vandhanukaamun Thaevasudhan Jega Ratsakarantai Saer, Saer, Saer, Saer, Saer, - Sey Avviyam Perumai Aganthaiyum Asutthamum Agarri Nee Anuthinamum Thivviya Vaedhath Theevartthi Oliyinil Sel,sel,sel,sel,sel - Sey Thurcchana Rotura Vaakaamal Aiyan Thuyya Vithibatthu Meeraamal Uchsidhap Pathamarul Yaesuvaip Paninthu Uy,uy,uy,uy,uy - Sey