பாடல் #9060
எது வேண்டும் சொல்
🔤 Ethu Vaentum Sol
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எது வேண்டும் சொல் நேசனே உனக் கெது வேண்டும் என் நேசனே? மதிவாட மனம்வாட மயக்கங்கண் ணிறைந்தாட மதுபான முண வேண்டுமோ அன்றித் துதிபாடும் உலகோருள் புகழ்பாடி மகிழ்ந்தாடச் சுத்த ஜலம் வேண்டுமோ - எது வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடி மதுவுண்டு கெட வேண்டுமோ அன்றித் தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத் தண்ணீ ருண்ண வேண்டுமோ - எது பகைதந்து பழிதந்து பரியாசந் தரு மது பான முண வேண்டுமோ அன்றித் தகை கொண்ட கதியேற அருளொடு புகழ்பெறத் தண்ணீ ருண்ண வேண்டுமோ - எது சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதி தருங்குடி வெறி வேண்டுமோ - அன்றிப் பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல பானமது வேண்டுமோ - எது இரத்தக்கண் பெருந்துக்கம் ஏக்கம் நடுக்கம் வெட்கம் இவைதருங் குடி வேண்டுமோ - அன்றித் திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான தெளிந்த தண்ணீர் வேண்டுமோ - எது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethu Vaentum Sol Naesanae Unak Kethu Vaentum En Naesanae? Mathivaada Manamvaada Mayakkanggan Nirainthaada Mathupaana Muna Vaentumo Anrith Thuthipaatum Ulakorul Pugazhpaati Makizhnthaadach Suttha Jalam Vaentumo - Ethu Vaathaati Nakaiyaati Vazhigalil Vizhunthaati Mathuvuntu Keda Vaentumo Anrith Thaathaavae Kanavaanae Thanavaanae Yenach Saartrath Thannee Runna Vaentumo - Ethu Pakaidhanthu Pazhidhanthu Pariyaasan Tharu Mathu Paana Muna Vaentumo Anrith Thakai Konda Kathiyaera Arulotu Pugazhperath Thannee Runna Vaentumo - Ethu Santai Kaayam Kanthai Amali Vaedhanaiyaathi Tharungkuti Veri Vaentumo - Anrip Pantai Vaedhanj Sonnapati Motsam Pera Jala Paanamathu Vaentumo - Ethu Ratthakkan Perunthukkam Aekkam Natukkam Vetkam Ivaidharung Kuti Vaentumo - Anrith Thiratthukkum Arivukkunj Sugatthukku Midamaana Thelindha Thanneer Vaentumo - Ethu