பாடல் #9059
தேவாதி தேவே நீரே சேவிக்கில்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை ஜீவார்தம் தரு வீரே ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப் பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கை செய்து - தேவாதி நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் - மரித் தன்றே நீ பேயை முற்றும் வென்றாய் நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி நேசா விஸ்வேசா இராசா சருவ ஜீவ - தேவாதி பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா -துணை நல்லாயனே என்பேன் வல்லாய் சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம் தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி - தேவாதி பண்டே மறைகை கொண்டே இதயந் தொண்டே - புரிந் தண்டே வரும் உதவி உண்டே விண்டே குறைகளும் தண்டை சுகிர்தமாகும் வேதா என் தாதா அதீதா மகத்வமான - தேவாதி