பாடல் #9057
உன்றன் திருப்பணியை உறுதியுடன்
🔤 Undran Thiruppaniyai Uruthiyudan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய உதவாத பாவிநானே அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு 1.வேதனத்தின் பொருட்டோ மேலவர் நிமித்தமே வெளியிட்ட டறிக்கை செய்யவோ உல காதாயம் சுயநயம் அகிலந்துரிய புகழ் அடைந்து ப்ரகாசிக்கவோ ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன் நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண்டுழைக்கேனோ 2.வேணல் குளிரைக் கண்டு மேனி மிகு வெருண்டு வெளியேறா தகம் துஞ்சினேன் வேளைப் பான முனைவுபிந்த பலபிணி வருமென்ற பயத்தாலே நித மஞ்சினேன் கானகம் மலைசென்று கடும்பனி குளிர் வென்று போனகம் நீர்கன்று புவியி லுழைத்த யேசு 3.காடோ மலைநதியோ கடலோ கடந்தலுத்துக் கஸ்தி மிகவே அடைந்து உடல் பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும் பகைவர் திருடர் மோசமும் சாடகிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய் ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே 4.வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு மயங்கி அயர்ந்து வாடுதே - இனி என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய இசைந்தென் மனது நாடுதே ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று நன்றே நிதம்புரிந்த நரனே பரனே யேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undran Thiruppaniyai Uruthiyudan Puriya Udhavaadha Paavinaanae Andhakaaramae Ninrun Arunodhayamae Kantu Vandha Naal Mudharkontu Vaitthaay Enakkun Thontu 1.vaedhanatthin Porutto Maelavar Nimitthamae Veliyitta Tarikkai Seyyavo Ula Kaathaayam Suyanayam Akilanthuriya Pugazh Atainthu Prakaasikkavo Othikkaalang Kazhikka Ulakaavi Ataindhavan Neethikkenaip Paliyaay Naernthukontuzhaikkaeno 2.vaenal Kuliraik Kantu Maeni Miku Veruntu Veliyaeraa Thakam Thunjsinaen Vaelaip Paana Munaivupindha Palapini Varumendra Payatthaalae Nidha Manjsinaen Kaanakam Malaisenru Katumbani Kulir Venru Ponakam Neerkanru Puviyi Luzhaittha Yaesu 3.kaato Malainathiyo Katalo Katandhalutthuk Kasthi Migavae Atainthu Udal Paatung Kavalai Noyum Pasiyum Niruvaanamum Pakaivar Thirudar Mosamum Saadakiristhuvukkuth Thakundha Paanapaliyaay Odatthanai Yoppitthon Uruthi Yenakkillaiyae 4.vanti Vakaigalotu Vaazhnthum Enathu Kootu Mayangki Ayarnthu Vaatuthae - Ini Enru Miruppidatthilirunthu Pani Puriya Isainthen Manathu Naatuthae Onrum Udhaviyinru Oorae Alainthu Senru Nanrae Nidhampurindha Naranae Paranae Yaesu