பாடல் #9056
நீதியாமோ நீர் சொல்லும்
🔤 Neethiyaamo Neer Sollum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதியாமோ நீர் சொல்லும் ஓய் நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச பாதை நடக்கில் சிலாக்யம் - நீதி தரித்திரக் கிரங்குவோன் உடனே இடுவான் தற்பரனுக் கவன் கடனே என்று கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார் கடுநெஞ் சகல் மானிடனே - நீதி அன்புடன் விதவையும் போட்ட காசை அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ் இன்புடன் அவள் மிசை சூட்ட அதை எவர்களும் அகத்தினில் நாட்ட - நீதி பிறர் புகழும்படி இன்றே செய்தால் பிரயோசனமிலை என்றே பரன் மறையதில் விளம்பினார் நன்றே அம் மாதிரி விலகாது நின்றே - நீதி பரிதானம் வாங்குதல் தீது - அதைப் பறித்தறம் செய்தல் தகாது உமக் குரியதில் ஈவேது போதம் இதில் ஊன்றி இருப்பதே நீதம் - நீதி ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே ஈண்டு சேர்ந்திடில் என்ன கீர்த்தி இதோ வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும் வாழலாம் அதுவே மா பூர்த்தி - நீதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethiyaamo Neer Sollum Oy Neriyulorae Aram Seyyaathirunthitil Aathulark Keevathae Paakkiyam Pirarai Aadharitthituvathae Yokkiyam Oko Paadhakam Seyyil Nirppaakkiyam Motsa Paathai Natakkil Silaakyam - Neethi Tharitthirak Kirangkuvon Udanae Ituvaan Tharparanuk Kavan Katanae Enru Karutthudan Karuthiyil Thidanae Uraitthaar Katunenj Sakal Maanidanae - Neethi Anpudan Vidhavaiyum Potta Kaasai Athi Viyappaay Yaesu Kaattap Pugazh Inpudan Aval Misai Sootta Athai Evarkalum Agatthinil Naatta - Neethi Pirar Pugazhumbati Inrae Seythaal Pirayosanamilai Enrae Paran Maraiyathil Vilampinaar Nanrae Am Maathiri Vilakaathu Ninrae - Neethi Parithaanam Vaangkudhal Theethu - Athaip Parittharam Seythal Thakaathu Umak Kuriyathil Eevaethu Podham Ithil Oonri Iruppathae Needham - Neethi Aezhaigat Keeyaathu Aasthi Aiyae Eentu Saernthitil Enna Keertthi Itho Vaazhula Katainthitil Naertthi Enrum Vaazhalaam Athuvae Maa Poortthi - Neethi