பாடல் #9055
கர்த்தருக்குக் காணிக்கையிதோ
🔤 Karttharukkuk Kaanikkaiyitho
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்குக் காணிக்கையிதோ தம்மையே தந்த கர்த்தருக்குக் காணிக்கையிதோ கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் பத்திலொன்று நான் கொடுப்பேன் சத்தியக் கிறிஸ்து நாதர் சபையை வர்த்திக்க வேணும் - கர்த்த 1 அநியாயம் நீங்க வேணும் உலகிலே மெய் அறிவு வளர வேணும் தனியேசு மெய்த்தேவனை நந்தேசத்தில் சகலரும் போற்ற வேணும் கனிவாய்ப் போதகர் வேதம் கற்றறிந்து சொல்ல வேணும் கணக்காய் இதன் செலவு கட்டி வரவேணும் அய்யா - கர்த் 2 ஆபிரகாம் பத்திலொன்றையே மெல்கிசே தேக்கு அனைத்திலும் தந்ததையே மா பிரியமாக வாசித்தேன் இஸ்ரயேல் பெத்தேல் வள்ளற்குச் செய்பொருத்தனையே ஆண்டவர் பரன் அவர்கட் கனைத்தும் ஆசிர்வதித்துத் தாபரம்த மதடி கீழ்த் தந்தளித்த தெல்லாங் கேட்டேன் - கர்த் 3 கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன் இதோ இத்தனை கூடினதைக் கொண்டிதோ வந்தேன் நஞ்சைவிளைவினி லோர்பாகம் சேர்த்து வைத்தேனான் நாலாவகை வரத்திற் கொஞ்சம் புஞ்சை பல போகத்திலும் போட்டு வைத்தே னான்குறுணி புத்தகக் கணக்கில் கண்ட தித்தினை தொகையுமாச்சு - கர்த்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukkuk Kaanikkaiyitho Thammaiyae Thandha Karttharukkuk Kaanikkaiyitho Karttharukkuk Kaanikkaiyaayp Patthilonru Naan Kotuppaen Satthiyak Kiristhu Naadhar Sapaiyai Vartthikka Vaenum - Karttha 1 Aniyaayam Neengga Vaenum Ulakilae Mey Arivu Valara Vaenum Thaniyaesu Meytdevanai Nanthaesatthil Sakalarum Portra Vaenum Kanivaayp Podhakar Vaedham Kartrarinthu Solla Vaenum Kanakkaay Idhan Selavu Katti Varavaenum Ayyaa - Karth 2 Aapirakaam Patthilonraiyae Melkisae Thaekku Anaitthilum Thandhathaiyae Maa Piriyamaaga Vaasitthaen Israyael Petthael Vallarkuch Seyporutthanaiyae Aandavar Paran Avarkat Kanaitthum Aasirvathitthuth Thaabaramtha Mathati Keezhth Thandhalittha Thellaang Kaettaen - Karth 3 Konjjang Konjjamaagach Saertthaen Itho Itthanai Kootinathaik Kontitho Vanthaen Nanjsaivilaivini Lorpaagam Saertthu Vaitthaenaan Naalaavakai Varatthir Konjjam Punjsai Pala Pogatthilum Pottu Vaitthae Naankuruni Putthakak Kanakkil Kanda Thitthinai Thokaiyumaachsu - Karth