பாடல் #9053
வெகு பேர்களுக் கின்பமான
🔤 Veku Paerkaluk Kinbamaana
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.வெகு பேர்களுக் கின்பமான மேதினியே நீ என்றனுக்கு மிகவும் திகில் கசப்பாம்பர தேசம் இது மெய்யலோ ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும் ஜெகத்தோரத்தால் வாழட்டும் தேவரீருட பேரிலே மெத்தத் தேட்டமாகினேன் யேசுவே 2.யேசு நீர் தரிசினை தந்தெனை யேற்கும் நன்மைக்காய் யாவையும் எளியேன் வெறுத் திந்த லோகத்தின் இன்பவாழ்வினைக் குப்பையாய் மோசமென்றுநா னெண்ணுவேன் நீரென் மோட்சமும் கதி ஆஸ்தியும் முன்னவா அடியே னும்மோடென்றும் முற்றுங்கூடினால் பாக்கியன் 3.இந்த ஏழைச் சரீரமாமண்ணை இளைப்பாறிட மண்ணினில் ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும் காலம் எய்திடில் நல்லதே அந்தநாளினி லெந்தன் பாடுகள் அத்தனைக்கும் முடிவுண்டாய் ஆவி உம்மிடம் தங்கப்போகுமே ஐந்து காயத்தில் ஏசுவே 4.வாராய் நித்திரையின் தோழனே சாவே என்னைக்கொண்டு போ வாகாய்கப்பல் தாவில்ஓட வழியே திருப்பாயோ பாரோர்திகி லானாயிந்த பக்தன்மகிழ் வானாய் பரன்யேசுவின் பரஞ் சேரநற் பாதை யெனக்கானாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.veku Paerkaluk Kinbamaana Maethiniyae Nee Endranukku Migavum Thikil Kasappaambara Thaesam Ithu Meyyalo Jegandhannaimaa Aasaiyaayp Parrum Jegatthoratthaal Vaazhattum Thaevareeruda Paerilae Metthath Thaettamaakinaen Yaesuvae 2.yaesu Neer Tharisinai Thanthenai Yaerkum Nanmaikkaay Yaavaiyum Eliyaen Veruth Thindha Logatthin Inbavaazhvinaik Kuppaiyaay Mosamenrunaa Nennuvaen Neeren Motsamum Kathi Aasthiyum Munnavaa Atiyae Nummotenrum Murrungkootinaal Paakkiyan 3.indha Aezhaich Sareeramaamannai Ilaippaarida Manninil Aerkavaekontu Poypputhaitthitum Kaalam Eythitil Nallathae Andhanaalini Lendhan Paatugal Atthanaikkum Mutivuntaay Aavi Ummidam Thanggappokumae Ainthu Kaayatthil Aesuvae 4.vaaraay Nitthiraiyin Thozhanae Saavae Ennaikkontu Po Vaakaaykappal Thaaviloda Vazhiyae Thiruppaayo Paarorthiki Laanaayindha Pakthanmakizh Vaanaay Paranyaesuvin Paranj Saeranar Paathai Yenakkaanaay