பாடல் #9052
பரத்திலே நன்மை
🔤 Paratthilae Nanmai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்தய பாக்கியம் மிகப் பெருகுமே பரத்திலே சிறந்த ஜீவபதி வளர் கிரீடம் அதைச் சிரத்திலே அணிய யேசு தேவனைப் பணிந்து போற்றுவோம் - பரத் வருத்தம் பசி தாகம் சாவில்லை அலறுதலும் மனத்துயர் இரவு சாபம் இல்லை அருணன் மதி வேண்டியதில்லை துன்மார்க்கர் எனும் அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை சருவ மகிமை யுடைய தந்தை பரனொடு கிறிஸ்தின் திரு அருள் மிகச் சிறந்த ஒளி தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே - பரத் ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து வஸ்திரங்கள் தமை அழுக்கறப் பிரகாசமாய் வெளுத்து வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து கண்ணீர் அறவே மகிமையின் கரத்தினால் துடைத்து கூட்டி ஜீவ புனலிடத்தில் கொண்டு மேய்த் தருள் முடியைச் சூட்டியே அனந்த பாக்கிய சுகத்தில் வாழ்ந்திருக்கச் செய்குவார் - பரத் பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம் பேர் ஒளி துலங்கும் பரம கிருபாசனத்தைச் சூழலாம் சங்கை யோடரசிருந்தே ஆளலாம் பராபரன் தன் சமூக ப்ரபைதனிலே வாழலாம் மங்கை சீயோன் மகளின் பிரிய மன்னவன் தேவாட்டுக் குட்டியின் இங்கிதக் கல்யாணப் பந்தியில் இருந்து நித்ய விருந்தால் மகிழலாம் - பரத்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paratthilae Nanmai Varukumae Namakku Nitthaya Paakkiyam Migap Perukumae Paratthilae Sirandha Jeevapathi Valar Kireedam Athaich Siratthilae Aniya Yaesu Devanaip Paninthu Porruvom - Parath Varuttham Pasi Thaagam Saavillai Alarudhalum Manatthuyar Iravu Saabam Illai Arunan Mathi Vaentiyathillai Thunmaarkkar Enum Asutthar Vanthu Saervathum Illai Saruva Makimai Yutaiya Thanthai Paranotu Kiristhin Thiru Arul Migach Sirandha Oli Thelivura Prakaasam Aakkumae - Parath Aattuk Kuttiyin Ratthatthil Thoytthu Vasthiranggal Thamai Azhukkarap Pirakaasamaay Velutthu Vaattanggal Anaitthaiyum Theertthu Kanneer Aravae Makimaiyin Karatthinaal Thutaitthu Kootti Jeeva Punalidatthil Kontu Maeyth Tharul Mutiyaich Soottiyae Anandha Paakkiya Sugatthil Vaazhnthirukkach Seykuvaar - Parath Panggam Inri Makizhnthu Vaazhalaam Paer Oli Thulangkum Parama Kirupaasanatthaich Soozhalaam Sangkai Yodarasirunthae Aalalaam Paraabaran Than Samooga Prapaidhanilae Vaazhalaam Mangkai Seeyon Makalin Piriya Mannavan Thaevaattuk Kuttiyin Ingkidhak Kalyaanap Panthiyil Irunthu Nithya Virunthaal Makizhalaam - Parath