பாடல் #9051
ஓ ஸ்திரி வித்
🔤 O Sthiri Vith
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ ஸ்திரி வித் தேசையா அன்பு கூராய் துன்பம் தீராயோ வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா வந்தெமை க்ருபைக் கண் பாராயோ 1.ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த அண்ணலே உமக் கபயமே ஓ ஸ்திரி வித்தேசையா ஆதரித் திரங்க வேண்டுமே - ஓ 2.எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம் எந்தையே கைவிட்டு விடாதேயும் ஓ ஸ்திரி வித்தேசையா எப்படியும் காத்தருள் மெய்யா - ஓ 3.ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ பாடுபட்ட பட்சக் கோனாரே ஓ ஸ்திரி வித்தேசையா காடுகளில் தேடிப் பாருமேன் - ஓ 4.மந்தையைக் க்ருபை கண்பாரும் சிந்தையில் துயரம் தீரும் சந்ததம் தொழுவம் சேருமேன் ஓ ஸ்திரி வித்தேசையா வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே - ஓ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O Sthiri Vith Thaesaiyaa Anpu Kooraay Thunbam Theeraayo Vasthorae Kiristhuvaethaa Maanuvaelae Yaesunaathaa Vanthemai Krupaik Kan Paaraayo 1.aathi Maanidar Purindha Paadhatham Tholaikka Vandha Annalae Umak Kapayamae O Sthiri Vitthaesaiyaa Aadharith Thirangga Vaentumae - O 2.etthanai Manakkilaesam, Nitthamum Satthurukkal Mosam Enthaiyae Kaivittu Vitaathaeyum O Sthiri Vitthaesaiyaa Eppatiyum Kaattharul Meyyaa - O 3.aatugal Sidharippochso Anniyaruk Kishtam Aachso Paatubatta Patsak Konaarae O Sthiri Vitthaesaiyaa Kaatugalil Thaetip Paarumaen - O 4.manthaiyaik Krupai Kanpaarum Sinthaiyil Thuyaram Theerum Sandhatham Thozhuvam Saerumaen O Sthiri Vitthaesaiyaa Vandhanam Umakku Sthotthiramae - O