பாடல் #9048
பரம வைத்தியா அருமை ரட்சகனே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும் வைத்தியப் பிணியினை ஆசிர்வதியும் ஐயனே பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே மருந்தோடே உமது பேரதிசய கிருபை கூருமே - பரம உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் அவருடன் துணைநின்று உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும் - பரம சயமும் சுரமும் பயமுறுத்துமே இதைத் தடுத்திடக் கொடை தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே - பரம அரிய நூதன முறைகள் காணவே ஆராய்ச்சிகள் செய்யும் அறிஞரால் புதுவழிகள் தோன்றவே - பரம ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா எங்கள் ஜெபத்தினால் சுகம் ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா - பரம