பாடல் #9047
விரும்பாதே மனமே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
விரும்பாதே மனமே, உலக வாழ்வை விரும்பாதே மனமே பதவி என தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக் கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை - விரும்பாதே அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மா மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் - விரும்பாதே பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும் ஜலத்தின் ஓட்டம்போலே லக்ஷணத்தில் ஒழிந்து போவார் - விரும்பாதே திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றே அட்டதிக்கிலும் உன்பேர் இஷ்டம் புரிந்தாலும் - விரும்பாதே பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும் என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்துநீ - விரும்பாதே லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு ஏசு பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே - விரும்பாதே நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில் களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு - விரும்பாதே