பாடல் #9042
பண்டிகை கொண்டாடுவோம்
🔤 Pantikai Kontaatuvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பண்டிகை கொண்டாடுவோம் ஆம் நாம் பண்டிகை கொண்டாடுவோம் 1.பண்டிகை கொண்டாடுவோம் பரமனைமன்றாடிப் பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி - பண்டிகை 2.புன்மைகொடும் பொல்லாப்பு புளிமா வைவிலக்கி உண்மை பரிசுத்தமாம் உய்ர்மா வைப்பலுக்கி - பண்டிகை 3.இன்றுயிர்த்தெ ழுந்தகோன் இனிமரிப்ப தில்லையே பொன்று மர ணஞ்சிறை பூண்டாள்வ தில்லையே - பண்டிகை 4.தரைபவத்திற் கென்றொரு தரமரித்த னர்சுதன் பரனவர்க்கு மகிமையாய்ப் படிபிழைத் திருக்கிறார் - பண்டிகை 5.நாதன்போற் பாவத்திற்கு நாமுமரிப் போமாகாப் பேதமின்று யேசுவுக்குப் பிழைத்திருப் போமாக - பண்டிகை 6.கிறிஸ்தடக்கப் பட்டுமா கீர்த்தியோ டே யெழுந்து முறைமரித்த வர்களில் முதற்பல னானாரே - பண்டிகை 7.மனுஷனாலு லகினில் மரணமுண் டானதால் மனுஷனாலே யுயிரெழில் மகிமையுண்டானதே - பண்டிகை 8.ஆதத்தா லெல்லாரும் அறமரித்தல் போலவே நாதனால் மெய்யாக நாமுயி ரடைகுவோம் - பண்டிகை 9.ஆதிபி தாகுமாரன் ஆவிதிரி யேகர்க்கே மாதிரி காலங்களாய் மாமகிமை யாகவே - பண்டிகை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pantikai Kontaatuvom Aam Naam Pantikai Kontaatuvom 1.pantikai Kontaatuvom Paramanaimanraatip Paskaa Kiristhai Namaskaaranj Seythaati - Pantikai 2.punmaikotum Pollaappu Pulimaa Vaivilakki Unmai Parisutthamaam Uyrmaa Vaippalukki - Pantikai 3.inruyirtthe Zhundhakon Inimarippa Thillaiyae Ponru Mara Nanjsirai Poontaalva Thillaiyae - Pantikai 4.tharaibavatthir Kenroru Tharamarittha Narsudhan Paranavarkku Makimaiyaayp Patipizhaith Thirukkiraar - Pantikai 5.naadhanpor Paavatthirku Naamumarip Pomaakaap Paedhaminru Yaesuvukkup Pizhaitthirup Pomaaga - Pantikai 6.kiristhatakkap Pattumaa Keertthiyo Tae Yezhunthu Muraimarittha Varkalil Mudharpala Naanaarae - Pantikai 7.manushanaalu Lakinil Maranamun Taanathaal Manushanaalae Yuyirezhil Makimaiyuntaanathae - Pantikai 8.aadhatthaa Lellaarum Aramaritthal Polavae Naadhanaal Meyyaaga Naamuyi Rataikuvom - Pantikai 9.aathipi Thaakumaaran Aavithiri Yaegarkkae Maathiri Kaalanggalaay Maamakimai Yaagavae - Pantikai