பாடல் #8997
பிதா குமாரன் பரிசுத்த
🎙 கிறிஸ்தவ பாடல்
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராம் திரித்துவ தேவனை துதித்திடுவோம் நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில் சேரக்கூடாத ஒளிதனில் மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும் பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம் பாவத்தின் கோர பலியான சாபங்கள் தன்னில் ஏற்றுக்கொண்டு பாவிகளுக்காய் ஜீவன் தந்த தேவகுமாரனை ஸ்தோத்தரிப்போம் வல்லமையோடு வந்திறங்கி வரங்கள் யாவும் நமக்கீந்த ஆவியின் வழியை தினம் காட்டும் பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம் அனல்போல் சோதனை வந்தாலும் அக்கினி ஊடாய் நடந்தாலும் சோதனை நம்மை சூழ்ந்தாலும் ஜெயம் அளிப்பவரை ஸ்தோத்தரிப்போம்