பாடல் #899
இயேசுவே உம் வரவை நித்தம்
🔤 Yesuvae Um Varavai Nittham
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன் உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன் மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன் தங்க பூமி அதில் நடக்க ஆசைப்படுகிறேன் - 2 இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா - 2 எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன் மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன் சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன் மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் - நான் - 2 தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன் ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன் பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன் மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2 உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன் தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன் கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் - என்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Um Varavai Nittham Enni Vaazhkiraen Umathu Azhaku Vathanam Kaana Thutithutikkiraen Makimaiyaana Undhan Veettai Vaanjsitthirukkiraen Thangga Poomi Athil Natakka Aasaippatukiraen - 2 Yesaiyaa Neer Endhan Aekkamaiyaa Yesaiyaa Enakku Ellaamae Neer Thaanaiyaa - 2 Enathu Paava Sumaigal Neengki Vitudhalai Perraen Maritthuyirttha Devanukkaay Pizhaitthirukkiraen Sakalamaanavarkkum Thaeva Thoothu Solkiraen Maranam Varai Keezhpatinthu Vaazhavirukkiraen - Naan - 2 Thaega Palan Otungkinaalum Sorvu Neengkinaen Aavi Manidhan Pelan Peravae Makizhnthirukkiraen Parama Vaasal Sthalatthai Naalum Aengkith Thavikkiraen Marana Acchaminri Nitthiya Vaazhvai Thodarkiraen -naan-2 Ulakin Vaasam Konjjam Kaalam Arinthirukkiraen Thaeva Piriyam Seyvathae En Aavalaakkinaen Kanakku Kaetkum Kartthar Munpu Nirkum Naalilae Makizhchsi Pongga Parisalippaar Makimaippatutthuvaar - En-2