பாடல் #8969
அன்பின் அலைகளுக்குள்
🎙 கிறிஸ்தவ பாடல்
அன்பின் அலைகளுக்குள் என்னை அமிழ்ந்து போக செய்தீர் எத்தனாம் எந்தனை நித்தமும் நினைக்க நித்தியரே ஸ்தோத்திரம் நன்றிஐயா நன்றிஐயா நன்றி ஐயா என் இயேசையா திரளான பாவங்களை மன்னித்தீரே திக்கற்ற என்னை நீர் நினைத்தீரே -(2) தேடி வந்தீரே ஓடி வந்திரே -(2) அன்பை பொழிந்தென்னை அனைத்தீரே காயங்கள் ஏற்றீரே கொல்கொதாவில் உம் கண்ணீரை சிந்தினீர் கெத்சமெனில் -(2) பாத்திரம் நீங்கிட பரிதவித்தீர் -(2) பாவியை நினைத்து ஒப்புக்கொடுத்தீர் என்னத்தை கண்டீரோ என்னிடத்தில் எனக்காக பாடுகள் ஏன் சகித்தீர் -(2) என்ன செய்வேனோ ஏது செய்வேனோ -(2) என்னை படைக்கிறேன் உம் பாதத்தில்