பாடல் #8959
ஆவி உடல் பொருள்
🔤 Aavi Udal Porul
🎙 Dr. ஆனந்தஸ்திரா • 💿 அன்பரின் ஊழிய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே பாவி என்னை மீட்க பரலோகத்தை விட்டு பார்தனில் வந்து மா பாடுகள் பட்டதால் ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே 2. பாவத்தை தண்ணீர் போல் பருகி வந்தேன் கோபத்திற்காளாய் கெட்டழிந்தேன் சாபத்திற்காளாய் சஞ்சரித்தேன் என் சாபத்தை ஏற்றுக்கொண்டீரே என் நாதா ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே 3. பங்க குருசில் படுத்தீர் அன்றோ தங்க திருமேனி தவித்ததன்றோ தாங்கொண்ணா வேதனை சகித்தீரன்றோ ஏங்குதே என் ஆவி அப்பாடு நினைக்கையில் ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே 4. பிள்ளையை போல் என்னை தாழ்த்துகிறேன் கள்ளமெல்லாமுமே தள்ளுகிறேன் உள்ளத்தை உம்முன்னே ஊற்றுகிறேன் தள்ளாதென்னை ஏற்றுக் கொள்ளுமே என் நாதா ஆவி உடல் பொருள் அத்தனையும் உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aavi Udal Porul Atthanaiyum Umakkaaga Pataikkiraen Aandavarae Paavi Ennai Meetka Paralogatthai Vittu Paarthanil Vanthu Maa Paatugal Pattathaal Aavi Udal Porul Atthanaiyum Umakkaaga Pataikkiraen Aandavarae 2. Paavatthai Thanneer Pol Paruki Vanthaen Kobatthirkaalaay Kettazhinthaen Saabatthirkaalaay Sanjjaritthaen En Saabatthai Aerrukkonteerae En Naathaa Aavi Udal Porul Atthanaiyum Umakkaaga Pataikkiraen Aandavarae 3. Pangga Kurusil Patuttheer Anro Thangga Thirumaeni Thavitthathanro Thaangkonnaa Vaedhanai Sakittheeranro Aengkuthae En Aavi Appaatu Ninaikkaiyil Aavi Udal Porul Atthanaiyum Umakkaaga Pataikkiraen Aandavarae 4. Pillaiyai Pol Ennai Thaazhtthukiraen Kallamellaamumae Thallukiraen Ullatthai Ummunnae Oorrukiraen Thallaathennai Aerruk Kollumae En Naathaa Aavi Udal Porul Atthanaiyum Umakkaaga Pataikkiraen Aandavarae