பாடல் #8912
இயேசு ராஜா எந்த நேசா
🎙 கிறிஸ்தவ பாடல்
இயேசு ராஜா எந்த நேசா உம்மைக் காணும் நாள் ஏதோ என்று நீர் வருவீர் என் இதயம் ஏங்குதே - இயேசு ராஜா பலநாள் நான் கண்ட கனவுகளும் பார்த்திட ஏங்கும் என் நினைவுகளும் ஒருநாள் நீர் வரும் நாள் என் வாழ்வினிலே இன்பத் திருநாள் என்று நீர் வருவீர் என் இதயம் ஏங்குதே - இயேசு ராஜா உம்மோடு நான் என்றும் வாழ்ந்திடவே உம்மைப் போல் என்றும் நடந்திடவே ஒரு நாள் நீர் வரும் நாள் என் ஊழிய திருநாள் உந்தன் சேவையை நான் செய்ய என் இதயம் ஏங்குதே - இயேசு ராஜா