பாடல் #8910
குருவிகள் பாடும் காலம்
🎙 கிறிஸ்தவ பாடல்
குருவிகள் பாடும் காலம் வந்தது காட்டுப் புறாவின் சத்தம் கேட்குது அத்திமரம் காய் காய்த்தது திராட்சை செடி பூப் பூத்தது என் பிரியமே நீ எழுந்து வா என் ரூபவதியே நீ எழுந்து வா கன்மலையின் வெடிப்புகளில் தங்கும் புறாவே கண்ணீர் சொரிந்து நிற்கும் வெண்புறாவே உந்தன் முக ரூபம் அழகானதே உந்தன் சத்தமும் இன்பமானதே என் இருதயத்தை கவர்ந்து சகோதரியே உன் கண்களினால் என்னை கவர்ந்த மணவாளியே உந்தன் நேசம் அதிமதுரமானதே உந்தன் நேசம் மிக இன்பமானதே