பாடல் #89
அனலாவி தினந்தோறும்
🔤 Analaavi Thinanthorum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும் அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும் அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும் கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும் தெய்வீக சாயல் எனதாக வேண்டும் - என் நிலையான செல்வம் நீராக வேண்டும் ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் - உம் வார்த்தை என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும் நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் - என் இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும் பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் - என் ஆசை பசி தாகம் நீராக வேண்டும் விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் - என் ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும் வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் - என் தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும் களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் - என் காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும் கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் - பின் மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Analaavi Thinanthorum Enaiyaalavaentum Aviyaamal Niraivotu Enai Kaakka Vaentum Arulmaari Nathiyaaga Enil Paaynthu Otum Kanivotum Thunivotum Paniseyyath Thoontum Theyveega Saayal Enathaaga Vaentum - En Nilaiyaana Selvam Neeraaga Vaentum Aayul Ellaam Naan Kanidhara Vaentum - Um Vaartthai En Vaazhvai Sezhippaakka Vaentum Nitthiya Paarvai Nalnokkam Vaentum - En Idhayatthin Ennanggal Neer Kaanavaentum Palantharum Ummeethu Manam Oondravaentum - En Aasai Pasi Thaagam Neeraaga Vaentum Visuvaasam Enakkullae Nilaitthongga Vaentum - En Janamellaam Yesuvai Paninthaaga Vaentum Vazhivazhiyaay Vaazhnthummai Saevikkavaentum - En Thaaynaatu Siluvaikku Saranaagavaentum Kalanggamillaamal Naan Vaazhnthidavaentum - En Kaalamellaam Um Paniseyyavaentum Katamai Mutitthae Naan Kanmoodavaentum - Pin Makimaiyil Ummugam Tharisikkavaentum