பாடல் #887
இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்
🔤 Yesuvukku Sondhamaana Pillaigal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் - அவர் அன்புக்கு அடிபணிந்த சீடர்கள் தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள் - அவர் ஆற்றலுக்கு வலுவான உயிர்ச்சான்றுகள் இசாவா நாங்கள் இசாவா - 2 இயேசுவைச் சேர்ந்தவர்கள் இசாவா - நாங்கள் -2 இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள் உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள் நிலைவாழ்வும் நிறைவாழ்வும் கண்ட ஞானிகள் சாத்தானைத் தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள் - நாங்கள் பாவ மாந்தர் மீட்பைக் காணும் அடையாளங்கள் தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள் தூய்மை மணம் வீசுகின்ற நற்கந்தங்கள் வாழ்வை பானபலியாக்கும் உயிர்த்தோழர்கள் - நாங்கள் தேவ அரசு விடிய உழைக்கும் போராளிகள் தேசத்தைக் கலக்குகின்ற சாவின் எதிரிகள் இராஜநெறி பரப்புகின்ற புரட்சியாளர்கள் தேவனுக்காய் வாழ்ந்து முடிக்கும் நித்யசாட்சிகள் - நாங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukku Sondhamaana Pillaigal - Avar Anpukku Atibanindha Seedarkal Thaevakaram Vativamaittha Jeeva Sirpanggal - Avar Aartralukku Valuvaana Uyirchsaanrugal Isaavaa Naanggal Isaavaa - 2 Yesuvaich Saerndhavarkal Isaavaa - Naanggal -2 Yesuvaip Parrikkonda Putthisaaligal Unnathatthil Koluvirukkum Vinthai Maandharkal Nilaivaazhvum Niraivaazhvum Kanda Njaanigal Saatthaanaith Thorkatikkum Verri Veerarkal - Naanggal Paava Maandhar Meetpaik Kaanum Ataiyaalanggal Thaeva Seythi Sumandhalaiyum Iraaja Matalkal Thooymai Manam Veesukindra Narkandhanggal Vaazhvai Paanapaliyaakkum Uyirtthozharkal - Naanggal Thaeva Arasu Vitiya Uzhaikkum Poraaligal Thaesatthaik Kalakkukindra Saavin Ethirigal Iraajaneri Parappukindra Puratsiyaalarkal Devanukkaay Vaazhnthu Mutikkum Nithyasaatsigal - Naanggal