பாடல் #8858
கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்
🔤 Karttharthaam Enggal Thurkkamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே; உண்டாம் இக்கட்டனைத்தையும் போக்குவார் அவர்தாமே பொல்லாங்கனின் சினம் இப்போது மா விஷம் துஷ்டமும் சூதையும் அணிந்து உறுமும் – நிகர் புவியில் இல்லை. 2. எதற்கு நாங்கள் வல்லவர்? இந்நீசர் சக்தியற்றோர்; எங்களுக்காய் வேறொருவர் போர் செய்வதற்கேற்பட்டோர் ஆர்? இயேசு கிறிஸ்துதான்; ஆ இந்தப் பலவான் ஆம் எங்கள் ரட்சகர்; சேனாபதி அவர் ஜெயிப்பார் அவர்தாமே. 3. விழுங்க வரும் பேய்களால் புவி நிரம்பினாலும் பயப்படோம்; கர்த்தாவினால் எதிர்த்து நிற்கக்கூடும் இருளின் பிரபு சீறினாலும், அது நசுக்கப்பட்ட பேய், தள்ளுண்ணத் தீர்ந்ததே; ஓர் சொல்லினால் ஒழியும். 4. பகைஞர் தெய்வ வார்த்தையை பகைத்தும், அது நிற்கும்; கர்த்தர் சகாயர், அவர் கை வரம் தந்தாதரிக்கும்; மாற்றார்கள் யாவையும் ஜீவனையேதானும் வாங்கினால், கேடாமோ; இராஜ்ஜியமல்லோ எங்களுக்கே யிருக்கும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Karttharthaam Enggal Thurkkamum Aran Palamumaamae; Untaam Ikkattanaitthaiyum Pokkuvaar Avarthaamae Pollaangganin Sinam Ippothu Maa Visham Thushtamum Soothaiyum Aninthu Urumum – Nigar Puviyil Illai. 2. Edharku Naanggal Vallavar? Inneesar Sakthiyarror; Enggalukkaay Vaeroruvar Por Seyvatharkaerpattor Aar? Yesu Kiristhuthaan; Aa Indhap Palavaan Aam Enggal Ratsakar; Saenaabathi Avar Jeyippaar Avarthaamae. 3. Vizhungga Varum Paeykalaal Puvi Nirampinaalum Payappatom; Kartthaavinaal Ethirtthu Nirkakkootum Irulin Pirapu Seerinaalum, Athu Nasukkappatta Paey, Thallunnath Theerndhathae; Or Sollinaal Ozhiyum. 4. Pakainjar Theyva Vaartthaiyai Pakaitthum, Athu Nirkum; Kartthar Sakaayar, Avar Kai Varam Thanthaadharikkum; Maarraarkal Yaavaiyum Jeevanaiyaethaanum Vaangkinaal, Kaetaamo; Iraajjiyamallo Enggalukkae Yirukkum.