பாடல் #8846
கர்த்தாவை நம்புவோரை
🔤 Kartthaavai Nampuvorai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் கைவிடார், பொல்லாரின்சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத்தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார். 2.கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன்; லௌகீக வாழ்வின் பாதை வேண்டாம், நான் இயேசுவை பின்பற்றி, இங்கே வாதை சகித்தால், மாநன்மை. 3. என் மேலேபாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிற வரத்தை அவரிடம் கேட்பேன், அவ்விதமாய் இக்கட்டை சகித்து வெல்லுவென். 4. கசப்பும் கர்த்தராலே வரும், நான் பின்வாங்கேன்; ஜெபத்தில் ஆசையோடே விண்ணப்பம் பண்ணுவேன்; அப்போது தயவாக காப்பாரே, கைவிடார்; இக்கட்டு பெரிதாக போம் போது தேற்றுவார். 5.அநேகர் ஆசைகொள்ளும் பொருளை வாஞ்சியேன்; கர்த்தாவின் வார்த்தை சொல்லும் மெய்ப் பொருள் நாடுவேன்; என் பொக்கிஷம், என் செல்வம், என் ஆஸ்த்திகிறிஸ்துவே; என் பாக்கியம், பேரின்பம், எல்லாம் என் மீட்பரே. 6.என் இயேசுவை நான் பற்றி தொடர்வேன் ஆவலாய்; என் சாபத்தை அகற்றி ரட்சித்தார் நேசமாய்; நான் தப்ப எனக்காக தம் ரத்தம் சிந்தினார்; எனக்கு ஜீவனாக ஜெயித்தழும்பினார். 7. இஸ்தோத்திரம் செலுத்த மிகுந்த நியாயமாம்; ஏன், ஜீவனைக் கொடுத்த என் கர்த்தருக்கெல்லாம் ஆதீனமாவதாக; அவருக்கென்றைக்கும் பணிந்த பக்தியாக நான் கீழ்ப்படியவும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.kartthaavai Nampuvorai Orkkaalum Kaivitaar, Pollaarinseerumaarrai Veenaakkip Potuvaar; Sanmaarkkaraip Palattha Kaiyaal Thayaabarar Ratsitthutthaazhchsiyartra Anpaay Visaarippaar. 2.kartthaavin Sitthatthukku Keezhppattatangkuvaen; Appo Naan Jeevanukku Naerae Natakkiraen; Laukeega Vaazhvin Paathai Vaentaam, Naan Yesuvai Pinbarri, Ingkae Vaathai Sakitthaal, Maananmai. 3. En Maelaepaaramaaga Varum Ikkattilae Paraabaran Anpaaga Ennotiruppaarae; Porukkira Varatthai Avaridam Kaetpaen, Avvidhamaay Ikkattai Sakitthu Velluven. 4. Kasappum Karttharaalae Varum, Naan Pinvaangkaen; Jebatthil Aasaiyotae Vinnappam Pannuvaen; Appothu Thayavaaga Kaappaarae, Kaivitaar; Ikkattu Perithaaga Pom Pothu Thaerruvaar. 5.anaegar Aasaikollum Porulai Vaanjsiyaen; Kartthaavin Vaartthai Sollum Meyp Porul Naatuvaen; En Pokkisham, En Selvam, En Aastthikiristhuvae; En Paakkiyam, Paerinbam, Ellaam En Meetparae. 6.en Yesuvai Naan Parri Thodarvaen Aavalaay; En Saabatthai Agarri Ratsitthaar Naesamaay; Naan Thappa Enakkaaga Tham Rattham Sinthinaar; Enakku Jeevanaaga Jeyitthazhumpinaar. 7. Isthotthiram Seluttha Mikundha Niyaayamaam; Aen, Jeevanaik Kotuttha En Karttharukkellaam Aatheenamaavathaaga; Avarukkenraikkum Panindha Pakthiyaaga Naan Keezhppatiyavum.