பாடல் #8842
மா பெரிதும் நின்
🔤 Maa Perithum Nin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மா பெரிதும் நின் கிருபை சாவரை மறவேனே; மாதாவின் கர்ப்பத்திருந்தே மா தயவாய் என்னையே அழைத்தீரே, மாதவம் நான் செய்தேனோ? 2.அந்தகாரத்தால் நிறைந்து சத்தமின்றி வாழ்ந்தேனே; தந்து உம்மைச் சொந்தமாக என்தனை நீர் மீட்டீரே; நாதா உம்மை என்றும் நான் துதிப்பேனே. 3.நான் நினைத்த பாதை வழி தேன் கசியும் பக்கமே செல்ல எத்தனித்தபோத, அல்லவென்று தடுத்தே ஆட்கொண்டீரே, ஆண்டாண்டும்மைப்போற்றுவேன். 4.ஊழியத்தை உண்மையுடன் வாழ்நாளெல்லாம் செய்யவும்; நீடும் கிருபைசூடியென்னை வீடு சேரும் வரையும் பலவீனம் தாங்கி தயை செய்வீரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maa Perithum Nin Kirupai Saavarai Maravaenae; Maathaavin Karppatthirunthae Maa Thayavaay Ennaiyae Azhaittheerae, Maadhavam Naan Seythaeno? 2.andhakaaratthaal Nirainthu Satthaminri Vaazhnthaenae; Thanthu Ummaich Sondhamaaga Enthanai Neer Meetteerae; Naathaa Ummai Enrum Naan Thuthippaenae. 3.naan Ninaittha Paathai Vazhi Thaen Kasiyum Pakkamae Sella Etthanitthapodha, Allavenru Thatutthae Aatkonteerae, Aantaantummaipporruvaen. 4.oozhiyatthai Unmaiyudan Vaazhnaalellaam Seyyavum; Neetum Kirupaisootiyennai Veetu Saerum Varaiyum Palaveenam Thaangki Thayai Seyveerae.