பாடல் #8834
லௌகீக இன்பம் மேன்மையும்
🔤 Laukeega Inbam Maenmaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. லௌகீக இன்பம் மேன்மையும் இப்பரதேசிக்கு வேண்டாம்; பரம நன்மை செல்வமும் இங்கில்லை, யாவும் மாயையாம்! பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 2. லௌகீக வாழ்வு ஒழியும்; சரீரம் அழகற்றுப்போம்; நரர் கைவேலை அழியும்; இவ்வுலகமும் வெந்துபோம்; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 3. ஆனாலும் இயேசு ராஜியம் அழிந்து போகமாட்டாதே; மா நீதியாம் சிங்காசனம் விழாமல் என்றும் நிற்குமே; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 4. நான் இங்கே தங்கும் நாள் எல்லாம் என் துன்பம் நீங்கமாட்டாதே; பரத்தில் சேர்ந்தபின் உண்டாம் மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Laukeega Inbam Maenmaiyum Ipparathaesikku Vaentaam; Parama Nanmai Selvamum Ingkillai, Yaavum Maayaiyaam! Porulallaadhathai Naataen; Naan Yesuvai Sinaekippaen. 2. Laukeega Vaazhvu Ozhiyum; Sareeram Azhakarruppom; Narar Kaivaelai Azhiyum; Ivvulakamum Venthupom; Porulallaadhathai Naataen; Naan Yesuvai Sinaekippaen. 3. Aanaalum Yesu Raajiyam Azhinthu Pogamaattaathae; Maa Neethiyaam Singkaasanam Vizhaamal Enrum Nirkumae; Porulallaadhathai Naataen; Naan Yesuvai Sinaekippaen. 4. Naan Ingkae Thangkum Naal Ellaam En Thunbam Neenggamaattaathae; Paratthil Saerndhapin Untaam Meyvaazhvu Maenmai Poorippae Porulallaadhathai Naataen; Naan Yesuvai Sinaekippaen.