பாடல் #8802
நாளெல்லாம் நினைக்கிறேன்
🔤 Naalellaam Ninaikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாளெல்லாம் நினைக்கிறேன் நீர் செய்த நன்மைகளை இம்மட்டும் நடத்தினீரே உம் அன்பிற்கு அளவில்லையே பாடுவேன் கிருபையை போற்றுவேன் மகிமையை உயிரானீர் இயேசுவே என் உலகமெல்லாம் நீங்க மட்டும் தான் பெலனற்று கீழே விழுந்தாலும் பெலவான் நீர் பெரியவரே பெலத்தாலே இடைகட்டினீர் பெலவானாய் மாற்றிவிட்டீர் மறுதலித்தேன் உம்மையே மறந்தேன் உம் அன்பினையே மறுபடியும் சேர்த்துக் கொண்டீர் மகனாக மாற்றிவிட்டீர் உயிரற்று உலர்ந்த என்னையும் உதவாதவன் என்று அறிந்தும் உயிர்தந்து தூக்கினீர் உமதாக மாற்றிவிட்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naalellaam Ninaikkiraen Neer Seytha Nanmaigalai Immattum Natatthineerae Um Anpirku Alavillaiyae Paatuvaen Kirupaiyai Porruvaen Makimaiyai Uyiraaneer Yesuvae En Ulakamellaam Neengga Mattum Thaan Pelanarru Keezhae Vizhunthaalum Pelavaan Neer Periyavarae Pelatthaalae Itaigattineer Pelavaanaay Maarrivitteer Marudhalitthaen Ummaiyae Maranthaen Um Anpinaiyae Marubatiyum Saertthuk Konteer Makanaaga Maarrivitteer Uyirarru Ularndha Ennaiyum Udhavaadhavan Enru Arinthum Uyirthanthu Thookkineer Umathaaga Maarrivitteer