பாடல் #8781
இயேசு உனக்கு கொடுத்த
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: Gm
Beat: Disco Fox
இயேசு உனக்கு கொடுத்த இடம் இதுதான் நீ இருக்கும் இடம் 1.தேவன் கொடுத்த இடத்திலே ஆபிரகாம் இருந்தான் அங்கே கண்ட வறட்சி நீங்க செழிப்படைந்தான் லோத்து செழிப்பு கண்ட இடத்தில் இருந்தான் தூதனாலும் காப்பாற்ற முடியாமல் மீறினான் 2.தேவன் கொடுத்த இடத்திலே ஈசாக்கு இருந்தான் துறவு கண்ட கண்களால் சொந்த இடம் கொண்டான் இஸ்மவேல் துஷ்டனாகி பழிகாரனானான் இன்னமும் மீட்பில்லாமல் விலகியேப் போனான் 3.தேவன் கொடுத்த இடத்திலே யாக்கோபு இருந்தான் சொல்லிமுடியாத ஐசுவரியம் அடைந்தான் ஏசா கோபம் கொண்டு வைராக்கியமானான் யாக்கோபு ஏசாவை நொடிப்பொழுதில் ஜெயித்தான் 4.தேவன் சொப்பனத்தில் யோசேப்பு இருந்தான் இன்பமே இல்லாத துன்பம் அடைந்தான் அடைந்த துன்பத்திற்கு சரியாய் ஆளுகை கண்டான் நல்ல மனதில் மன்னித்து வீட்டாருக்கு வாழ்வு தந்தான் 5. இயேசுவை விட்டு நீ சென்றாலும் ஜெயமில்லை இயேசுதான் உனக்கு வாழ்வு தரும் தேவன் மறவாதே, மறுதலியாதே மன்னிப்பார் ஓடி வா தயவும், மன்னிப்பும் நிறைந்தவர்தான் இயேசு