பாடல் #8736
வேதம் சொல்லும் வேத வாக்கியம்
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: D
Beat: Swing 1
வேதம் சொல்லும் வேத வாக்கியம் மூலைக்குத் தலைக்கல் இயேசு கிறிஸ்துவே -2 இவரில் களிகூர்ந்து மகிழ்ந்திருப்போம் -2 1. கிருபையுண்டாக பெரிய நாமத்தால் கிருபையுண்டாக இயேசு கிறிஸ்துவால் நீ எம்மாத்திரம் பெரிய பர்வதமே சீக்கிரம் எம் முன் சமபூமியாவாய் அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே -2 2. அற்பமாக எண்ணப்பட்ட நம் இயேசு மூலைக்குத் தலைக்கல்லானாரே இவரே முழு உலக மனுகுல மீட்பர் வானத்தின் கீழே மனுஷர்குள்ளே இயேசுவின் நாமமே இந்த உலகிலே 3. நித்திய மகிழ்ச்சி நம் தலைமேல் சந்தோஷமும் மகிழ்ச்சியும் என்றும் அடைவோம் சஞ்சலமும் தவிப்பும் இன்று ஓடிப்போம் இயேசுவால் மீட்கப்பட்ட நாம் அனைவரும் ஆனந்தக் களிப்புடன் பாடி ஆடுவோம் 4. துன்மார்க்கனை கடும் புயல் மோதும் இருதய நினைவில் வருவது நடக்கும் வீண் பெருமை யூகத்தில் அழியும் தூரத்திலும், சமீபத்திலும், இயேசு நம்மை கட்டுவார், நாட்டுவார், அவர் ஜனமாக்குவார்