பாடல் #873
இயேசுவின் நாமம் இன்ப நாமம்
🔤 Yesuvin Naamam Inba Naamam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் இன்ப நாமம் வல்லமையுள்ள நாமம் – அந்த நாமத்திலே துதி பாடிடுவோம் – 2 கன மகிமையை செலுத்திடுவோம் 1. இயேசுவின் நாமமின்றி வேறு நாமத்தில் மீட்பில்லையே அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே 2. மகிழ்ச்சிக் குரலெழுப்பி மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் எக்காளத்தோடும் கைத்தாளதோடும் நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம் 3. தாய் என்னை மறந்தாலும் அவர் ஒருபோதும் மறக்கமாட்டார் என்னை நினைத்துக் கொள்ள என் நாமத்தையே அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார் 4. எக்காளம் முழங்கிடவே வான மேகங்கள் நடுவினிலே – அவர் மகிமை யோடும் வான தூதரோடும் இயேசு இராஜாதி ராஜன் வருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam Inba Naamam Vallamaiyulla Naamam – Andha Naamatthilae Thuthi Paatituvom – 2 Kana Makimaiyai Selutthituvom 1. Yesuvin Naamaminri Vaeru Naamatthil Meetpillaiyae Andha Naamatthilae Mannor Anaivarumae Naam Mantiyittu Jepippomae 2. Makizhchsik Kuralezhuppi Mannan Yesuvil Makizhnthituvom Ekkaalatthotum Kaitthaalathotum Naam Aarpparitthup Paatituvom 3. Thaay Ennai Maranthaalum Avar Orupothum Marakkamaattaar Ennai Ninaitthuk Kolla En Naamatthaiyae Avar Ullangkaiyil Poritthu Ullaar 4. Ekkaalam Muzhangkidavae Vaana Maeganggal Natuvinilae – Avar Makimai Yotum Vaana Thoodharotum Yesu Iraajaathi Raajan Varuvaar