பாடல் #8723
சிங்காரம் சிங்காரம் சிங்காரம்
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
Scale: Cm
Beat: Hully Gully
சிங்காரம் சிங்காரம் சிங்காரம் சீயோன் சிஙகார நகரமே சொல்லுக்கு அருமை பல்லுக்கு இனிமை நிலையான ஸ்தாபன சிங்காரமே 1. சகல ஜாதியும் சேவிக்குதே சகல இராஜ்ஜியம் துதிக்குதே சகல தேசமும் பாடிடுதே சகல திசையும் திரும்பிடுதே 2. கைவிட படாத நகரமிதே கீர்த்தி நிறைந்த ஸ்தலமிதே புகழ்ந்து பாடிடும் பட்டணமே ஆச்சரியமான அலங்காரமே 3. அணையா விளக்கு எரியுதே வீரிய நடையும் அடையுதே தேவ ஆணை அசையாதே அது நிறைவேறும் நாளும் வருதே 4. நித்தியமான ஸ்தாபனமே தேவஸ்தானம் பேசுதே அங்கே தேவ மக்கள் பெருகுதே பாதகமோ அங்கே பதறுதே