பாடல் #8698
கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர்
🔤 Karttharaith Thuthiyunggal Avar Nallavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது உறங்குவாரோ இஸ்ரவேலரை காப்போர் உடையும் ஆகாரமும் அளிக்கிறவர் வலது பாரிசத்தில் உன் நிழலாயிருப்பவர் வலது கரம்பிடித்து வழி நடத்திடுவார் நீதிமான் கைவிடப்பட்டதில்லை அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்ததில்லை நித்தம் கடன் கொடுப்பான் சத்திய பாதை நடப்பான் கர்த்தர் அவன் வழியில் பிரியமாயிருப்பார் கர்த்தரின் அழைப்புக்கு இணங்கியவர் கைவிடப்பட்டதில்லை பாதையிலே சிங்கக்குட்டி தாழ்ச்சி அடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரை தேடுவோர்க்கோர் நன்மையுங்குறையாது கர்த்தருக்காய் தன்னை வெறுத்தவர்கள் தரித்திரராய் ஆனதில்லை கர்த்தரின் சேவைக்காய் அள்ளி அள்ளி இறைத்தோர் ஆயிரமாயிரம் ஆசிர்வாதம் அடைந்தார். அன்பு ஐக்கியம் தேவக்கிருபை தேவை உன் தேற்றரவாளனவர் அக்கினி மதிலாய் அணைத்துன்னை காப்பார் விக்கினமின்றி காத்து வெற்றி வீரராக்குவார் அல்லேலூயா அல்லேலூயா கூறுவோம் அனுதினம் அவர்துதி பாடுவோம் நாம் பெற்ற நன்மைக்காய் நன்றிகூறி வாழ்த்துவோம் ஒவ்வொன்றாய் எண்ணி ஓசன்னா கீதம் பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaith Thuthiyunggal Avar Nallavar Avar Kirupai Enrumullathu Urangkuvaaro Isravaelarai Kaappor Utaiyum Aakaaramum Alikkiravar Valathu Paarisatthil Un Nizhalaayiruppavar Valathu Karampititthu Vazhi Natatthituvaar Neethimaan Kaividappattathillai Avan Sandhathi Appatthukku Irandhathillai Nittham Katan Kotuppaan Satthiya Paathai Natappaan Kartthar Avan Vazhiyil Piriyamaayiruppaar Karttharin Azhaippukku Inangkiyavar Kaividappattathillai Paathaiyilae Singgakkutti Thaazhchsi Atainthu Pattiniyaayirukkum Karttharai Thaetuvorkkor Nanmaiyungkuraiyaathu Karttharukkaay Thannai Verutthavarkal Tharitthiraraay Aanathillai Karttharin Saevaikkaay Alli Alli Iraitthor Aayiramaayiram Aasirvaadham Atainthaar. Anpu Aikkiyam Thaevakkirupai Thaevai Un Thaertraravaalanavar Akkini Mathilaay Anaitthunnai Kaappaar Vikkinaminri Kaatthu Verri Veeraraakkuvaar Allaelooyaa Allaelooyaa Kooruvom Anuthinam Avarthuthi Paatuvom Naam Pertra Nanmaikkaay Nanrikoori Vaazhtthuvom Ovvonraay Enni Osannaa Keedham Paatuvom