பாடல் #867
இசையாலே இயேசுவைப் பாடுவோம்
🔤 Isaiyaalae Yesuvaip Paatuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இசையாலே இயேசுவைப் பாடுவோம் இன்னிசையாலே இயேசுவைப் பாடுவோம் நல்லவர் அவர் செய்த நன்மைகளை நாள்தோறும் நாள்தோறும் பாடுவோம் எக்காள தொனியுடன் பாடுவோம் கைத்தாள ஓசையுடன் பாடுவோம் வீணை கொண்டு பாடுவோம் விடுதலை ஈந்தவரைப் பாடுவோம் தம்புரு நடனத்தால் பாடுவோம் தயைமிக்க வைத்தவரைப் பாடுவோம் தாளங்கள் முழங்கிடப் பாடுவோம் தற்பரன் இயேசுவைப் பாடுவோம் ஸ்தோத்திர பலியிட்டுப் பாடுவோம் துதிகள் செலுத்தியே பாடுவோம் யாழோடும் குழலோடும் பாடுவோம் யாத்திரைக் களைப்பினிலே பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isaiyaalae Yesuvaip Paatuvom Innisaiyaalae Yesuvaip Paatuvom Nallavar Avar Seytha Nanmaigalai Naalthorum Naalthorum Paatuvom Ekkaala Thoniyudan Paatuvom Kaitthaala Osaiyudan Paatuvom Veenai Kontu Paatuvom Vitudhalai Eendhavaraip Paatuvom Thampuru Natanatthaal Paatuvom Thayaimikka Vaitthavaraip Paatuvom Thaalanggal Muzhangkidap Paatuvom Tharparan Yesuvaip Paatuvom Sthotthira Paliyittup Paatuvom Thuthigal Selutthiyae Paatuvom Yaazhotum Kuzhalotum Paatuvom Yaatthiraik Kalaippinilae Paatuvom